ராசிபுரம் நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் 216 கிலோ பறிமுதல்

ராசிபுரம் நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் 216 கிலோ பறிமுதல்

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ராசிபுரம் நகராட்சி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 216 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதிகளான கடைவீதி, அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள 10.க்கும் மேற்பட்ட கடைகளில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, ராசிபுரம் நகராட்சி ஆணையர் முத்துசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆணையர் முத்துசாமி தலைமையில், தூய்மை அலுவலர் செல்வராஜ், தூய்மை ஆய்வாளர் சிவா மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் முத்தமிழ்செல்வன், பன்னீர்செல்வம், ராஜேந்திரன் மற்றும் பரப்புரையாளர்கள் மேற்கண்ட பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பேப்பர் கப்புகள், கேரி பேக், விற்பனை செய்யப்படுவது தெரிபவந்தது. அவர்களிடம் இருந்து, மொத்தம் 216கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், 5க்கும் மேற்பட்ட கடைகளுக் ரூபாய் 7,000 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்பட்டால் அபராதம் அதிகமாக வசூலிக்கப்படும் என எச்சரித்தனர்.

Tags

Next Story