ரூ 21.76 லட்சம் பஞ்சு கொள்முதல் !

ரூ 21.76 லட்சம் பஞ்சு கொள்முதல் !

 பஞ்சு

கள்ளக்குறிச்சியில் நடந்த பருத்தி வார சந்தையில் ரூ.21.76 லட்சத்துக்கு பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் நடந்த பருத்தி வார சந்தையில் ரூ.21.76 லட்சத்துக்கு பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி வார சந்தை நடத்தப்படுகிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பஞ்சு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று நடந்த சந்தையில் எல்.ஆர்.ஏ., ரக பஞ்சு 751 மூட்டைகள் விற்பனைக்கு எடுத்து வரப்பட்டன. எல்.ஆர்.ஏ., ரகம் குறைந்தபட்சம் 6,682 ரூபாய்க்கும், அதிகபட்சம் 8,169 ரூபாய்க்கும் விலை போனது. அதன்படி 182 விவசாயிகள் கொண்டுவந்த 751 பஞ்சு மூட்டைகள், 21 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story