கள்ளக்குறிச்சி:டிச,21"SI தேர்வு...

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு! *காவல் சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு தொடர்பான மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பத்திரிக்கை செய்தி நாள்: 19.12.2025* தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் 2025-ஆம் ஆண்டிற்கான காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிக்கு தேர்வு
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் 2025-ஆம் ஆண்டிற்கான காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு வருகின்ற 21.12.2025 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கீழ்க்கண்ட 2 தேர்வு மையங்களில் 1924 ஆண் விண்ணப்பதாரர்கள் மற்றும் 595 பெண் விண்ணப்பதாரர்கள் என மொத்தம் 2519 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். i. AKT Educational Institution (Matric Higher Sec. School) Main Block Neelamangalam Kallakurichi - 606 213. (For Men Candidate) ii. AKT Educational Institution (St.Thomes Block) & (EMR Block) AKT Nagar Neelamangalam Kallakurichi - 606 213. (For Women Candidate)
தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களின் கவனத்திற்கு:
 தேர்வாளர்கள் காலை 09.30 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.  காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை முதன்மை எழுத்து தேர்வு நடைபெறும். பிற்பகல் 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ்மொழி தகுதி தேர்வு நடைபெறும்.  விண்ணப்பதாரர்கள் தேர்வு அழைப்பாணை (Hall Ticket), ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், etc., போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை (Original ID Proof) மட்டுமே கொண்டு வரவேண்டும். நகல்கள் (Xerox) அனுமதிக்கப்படமாட்டாது.  தேர்வாளர்கள் கருப்பு நிற பந்து முனை பேனா (Black Ballpoint Pen) மட்டுமே கொண்டு வரவேண்டும்.  தேர்வாளர்கள் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச், ப்ளுடூத் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு மையத்திற்குள் கொண்டுவர அனுமதி கிடையாது.  தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்து தேர்வு முடித்தவுடன் தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது. பிற்பகல் நடைபெறும் தமிழ்மொழி தகுதி தேர்வு முடிந்த பிறகுதான் தேர்வு மையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.  தேர்வாளர்கள் தேர்வு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவகத்தில் (Paid Canteen) பணம் மட்டுமே (Only Cash) செலுத்தி உணவு மற்றும் திண்பண்டங்கள் பெற்றுக்கொள்ளலாம். (G-Pay, Phone-Pe, Paytm, etc., போன்ற Online பணப்பரிவர்த்தனைக்கு அனுமதி இல்லை).  கள்ளக்குறிச்சி பேருந்துநிலையத்தில் இருந்து தேர்வு மையமான AKT Educational Institution-க்கு செல்ல சிறப்புப் பேருந்துகள் 21.12.2025 காலை 06.00 மணி முதல் இயக்கப்படும்.
Next Story