22- லட்சம் மதிப்பிலான புதிய ஊராட்சி மன்ற கட்டிட திறப்பு விழா..

திருவாரூர் அருகே கொரடாச்சேரி ஒன்றிய பகுதிகளில் சுமார் 22 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கலைவாணன் திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட எருக்காட்டூர் கிராமத்தில் 22 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை பூண்டி கலைவாணன் திறந்து வைத்து முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கினை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர் சேகர் என்கிற கலியபெருமாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாலாஜி,ராஜா கூட்டுறவு துணைப்பதிவாளர் பாத்திமா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர் பங்கேற்றனர்.
Next Story