22 ஆயிரம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு

22 ஆயிரம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு
X
குற்றாலம் உள்ளிட்ட 3 கிராமங்களின் ஆற்றங்கரை ஓரங்களில் விதைப்பு
நாகை மாவட்டம் இகோட்டோ சுற்றுச்சூழல் அமைப்பின் வழிகாட்டுதலின் பேரில், கடந்த 2 மாதங்களாக திருமருகல் ஒன்றியத்தில் உள்ள குத்தாலம், துறையூர் மற்றும் திருக்கண்ணபுரம் கிராமங்களில் இயங்கும் சூழலியல் மையத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பனை விதைகளை சேகரித்தனர். மொத்தம் 22 ஆயிரம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு, 3 கிராமங்களின் ஆற்றங்கரை மற்றும் வயல் ஓரங்களில் விதைக்கப்பட்டன.பனை விதை சேகரிப்பில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழும், நெகிழி விழிப்புணர்வை முன்னிட்டு, மீண்டும் மஞ்சப்பையும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை, விஜயா, பவித்ரா, ஆர்த்தி மற்றும் ஹரிணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பனை விதை விதைப்பில், சிறப்பாக செயல்பட்ட குத்தாலம் பகுதியை சேர்ந்த மாணவி ச.பிரியதர்ஷினி இகோட்டோ சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பாக, கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திற்கு சூழலியல் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டார்.
Next Story