22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கஞ்சா வியாபாரி கைது

X
தேனி மாவட்ட போதைப் பொருட்கள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் 2003ஆம் ஆண்டு 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் வழக்கில் கேரளா ராஜாக்காடு பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரியான ஜோமன் (43) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கஞ்சா வியாபாரி ஜோமனை நேற்று (ஏப்.25) இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் கேரளாவில் வைத்து கைது செய்தனர்.
Next Story

