கன்னியாகுமரி தொகுதியில் 22 பேர் போட்டி
பைல் படம்
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட பிரதான கட்சி வேட்பாளா்கள் உள்பட 25 பேர் மனு தாக்கல் செய்திருந்தனா் .வேட்புமனுக்களுக்கான பரிசீலனை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாா்ச் 28 ஆம் தேதி நடைபெற்றது. இதில், 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 22 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வேட்பாளா்கள் யாரும் மனுக்களை வாபஸ் பெறாததால், இறுதிப் பட்டியலில் 22 வேட்பாளா்கள் இடம் பெற்றனா்.
இதில் பாஜக வேட்பாளா் பொன்.ராதாகிருஷ்ணன் தாமரை சின்னத்திலும், காங்கிரஸ் வேட்பாளா் விஜய்வசந்த் கை சின்னத்திலும், அதிமுக வேட்பாளா் பசலியான் நசரேத் இரட்டை இலை சின்னத்திலும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மரியஜெனி பா்கிளாரா மைக்கேல் ஒலிவாங்கி (மைக்) சின்னத்திலும் போட்டியிடுகின்றனா்.
பகுஜன் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஜி.விஜயன் யானை சின்னத்திலும், சுயேச்சைகளான எம்.கீதா தீப்பெட்டி சின்னத்திலும், என்.சரவணன் மோதிரம் சின்னத்திலும், சி.எம்.டாம் மனோகா் சாம் குடிமக்கள் சின்னத்திலும், ராஜன்சிங் வைரம் சின்னத்திலும், வி.அய்யப்பன் பானை சின்னத்திலும், ஆன்றனி மைக்கேல் கேக் சின்னத்திலும், என்.இசக்கிமுத்து, இரட்டை தொலைநோக்காடி சின்னத்திலும், பி.கிருஷ்ணன் சாலை உருளை சின்னத்திலும், பி.சதீஷ்பாபு திராட்சை சின்னத்திலும், என்.சாந்தகுமாா் ஆட்டோ ரிக்ஷா சின்னத்திலும், வி.டென்னிசன் கிரிக்கெட் மட்டை சின்னத்திலும், நாகூா் மீரான் பீா் முகமது புகைப்படக்கருவி சின்னத்திலும், டி.பாலசுப்பிரமணியன் புல்லாங்குழல் சின்னத்திலும், எல்.பெறிலா காலணி சின்னத்திலும், ஜே.எல்.ரமேஷ்குமாா் தலைக்கவசம் சின்னத்திலும், டி.வினோ ஜெபசீலன் இருமுனை பளுகருவி சின்னத்திலும், ஏ.சி.வெங்கடேஷ் வாளி சின்னத்திலும் போட்டியிடுகின்றனா்.