ஆரணி குறை தீர்வு கூட்டத்தில் 22 மனுக்கள்

ஆரணி குறை தீர்வு கூட்டத்தில்  22 மனுக்கள்

 ஊரக வேலைத் திட்டப் பணி அடையாள அட்டை வழங்கிய கோட்டாட்சியர் 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமை வகித்தார். கூட்டத்தில் பட்டா, பட்டா பெயர் மாற்றம், கூட்டு பட்டா வழங்கக் கோரி, மனைப் பட்டா, மின்சாரம் தாக்கி இறந்ததால் நிவாரணம் வழங்கக் கோரி, ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி, உள்பிரிவு செய்து பட்டா மாற்றம், நில அளவை, மகளிர் உரிமைத்தொகை கேட்டும் உள்ளிட்ட 22 கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியரிடம் வழங்கினர். மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியர் தனலட்சுமி, அவற்றை அந்தந்த துறை அதிகாரிகளிடம் அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், ஆரணியை அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் காசி. மாற்றுத்திறனாளியான இவர் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அடையாள அட்டை கேட்டு மனு கொடுத்தார். இதன் பேரில், கூட்ட முடிவில் மாற்றுத்திறனாளி காசிக்கு வேலை உறுதித்திட்ட அடையாள அட்டையை கோட்டாட்சியர் வழங்கினார்

Tags

Next Story