22 பள்ளி வாகனங்கள் அதிகாரிகள் நிராகரிப்பு !!

22 பள்ளி வாகனங்கள் அதிகாரிகள் நிராகரிப்பு !!

வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு

வாகன கேமரா பழுது, அவசர வழி சரியாக திறக்காதது, இருக்கை பழுது உள்ளிட்ட குறைபாடுகள் காரணமாக, 22 வாகனங்கள் நிராகரிக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகஎல்லையில் குன்றத்துார், கோவூர், கெருகம்பாக்கம், மாங்காடு மற்றும் அதை சுற்றி 28 தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. கோடை விடுமுறை முடிந்து, அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த பள்ளி வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு, குன்றத்துாரில் நேற்று நடந்தது.

ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் சரவணகண்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி உட்பட பல துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு நடந்தது. இதில் பங்கேற்ற 188 பள்ளி வாகனங்களின் பிரேக், ஹாரன், முகப்பு விளக்கு, இன்டிகேட்டர்,வேக கட்டுப்பாடு கருவி, அவசரகால வழி, இருக்கைகள், படிக்கட்டுகள், வாகன உரிமம் ஆகியவற்றை சோதனை செய்தனர்.

இதில், 166 வாகனங்களுக்கு மாணவர்களை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்பட்டன. வாகன கேமரா பழுது, அவசர வழி சரியாக திறக்காதது, இருக்கை பழுது உள்ளிட்ட குறைபாடுகள் காரணமாக, 22 வாகனங்கள் நிராகரிக்கப்பட்டன.

Tags

Next Story