221 வாகனங்களுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிப்பு

221 வாகனங்களுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிப்பு
X
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், விதிமீறிய 221 வாகனங்களுக்கு, 23 லட்சத்து 99,510 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், கடந்த ஏப், மே என, இரு மாதங்களில், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் ஆய்வு செய்து, விதிமீறிய 221 வாகனங்களுக்கு, 23 லட்சத்து 99,510 ரூபாய் அபராதமாக வசூல் செய்துள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் கூறியதாவது: காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவுப்படி, பொது சாலையில், 3,000க்கும் மேற்பட்ட வாகனங்களை ஆய்வு செய்ததில் அதிகப்படியான சுமை ஏற்றிய சரக்கு வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்காத, ஓட்டுநர் உரிமம், அனுமதி சீட்டு, வரி செலுத்தாத வாகனங்கள் என, 221 வாகனங்கள் கண்டறியப்பட்டன. இந்த வாகனங்களுக்கு வரி, அபராதம் வசூலித்தும், வாகனத்தை சிறை பிடித்து அபராதம் வசூலித்தது என, மொத்தமாக 23 லட்சத்து 99,510 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதில், விதியை மீறி அதிகப்படியாக பயணியர் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சிறைபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story