கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.22.25 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 22.25 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கமிட்டிக்கு, எள் 200 மூட்டை, மக்காச்சோளம் 110, மணிலா 25, தலா ஒரு மூட்டை ராகி, உளுந்து உட்பட 337 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை எள் 9,866, மக்காச்சோளம் 2,239, மணிலா 7,664, ராகி 2,499, உளுந்து 8,199 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக ரூ.22 லட்சத்து 25 ஆயிரத்து 953க்கு நேற்று வர்த்தகம் நடந்தது. சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 22, எள் 7 என மொத்தம் 29 மூட்டை விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,561, எள் 7,546 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 739க்கு வர்த்தகம் நடந்தது. தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் நெல் 120, எள் 15 என மொத்தம் 135 மூட்டை விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை நெல் 1,450, எள் 9,179 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ரூ.3 லட்சத்து 58 ஆயிரத்து 900க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.