224 மாணவர்களுக்கு திமுக சார்பில் பரிசளிப்பு.

X
Paramathi Velur King 24x7 |28 July 2025 6:32 PM IST10, 12–ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற 224 மாணவர்களுக்கு திமுக சார்பில் பரிசளிப்பு.
பரமத்தி வேலூர், ஜூலை 27: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பரமத்தி வேலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உள் பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும்12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடங்க ளைப் பிடித்த 224 மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பரமத்தி அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடை பெற்ற இவ்விழாவிற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார். பரமத்தி ஒன்றியச் செயலாளர் தனராசு வரவேற்றார். மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் வெப்படை செல்வராஜ், கபிலர்மலை தெற்கு ஒன்றியச் செயலாளர் சாமிநாதன், கபிலர்மலை வடக்கு ஒன்றியச் செயலாளர் தளபதி சுப்பிரமணியம், கபிலர்மலை மத்திய ஒன்றியச் செயலாளர் வழக்குரைஞர் சரவணகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு மற்றும் தனியார் பள்ளி அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 224 மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகிழ் பிரபாகரன், மாவட்ட இளைஞ ரணி துணை அமைப்பாளர்கள் நவலடி ராஜா, பூக் கடை சுந்தர், பேரூர் திமுக செயலாளர்கள் முருகன், சோமசேகர், கிளை நிர்வாகிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Next Story
