23ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது
Virudhunagar King 24x7 |20 July 2024 3:00 PM GMT
23ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் வகையில் ”கள ஆய்வில் முதலமைச்சர் “ என்ற முன்னெடுப்பின் கீழ், பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காண அறிவுறுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் நிருவாகத்தில் மற்றுமொரு மைல் கல்லாக ”மக்களுடன் முதல்வர்” திட்டம் முதல்வரின் முகவரித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்” முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதற்காக, 15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் 11.07.2024 முதல் 14.08.2024 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது, 23.07.2024 அன்று திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாத்தூர் மற்றும் நரிக்குடி வட்டாரங்களில் கீழ்க்கண்ட ஊராட்சிகளில் நடைபெற உள்ளது. திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில், அத்தகுளம் தெய்வேந்திரி - C.S.I..திருமண மண்டபம், அத்திகுளம் சர்ச் அருகில், அத்தகுளம் தெய்வேந்திரி, கரிசல்குளம், கோட்டைப்பட்டி, அச்சங்குளம், அத்திகுளம் செங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கும், வத்திராயிருப்பு வட்டாரத்தில், குன்னூர் - பத்ரகாளியம்மன் திருமண மண்டபத்தில், வலையபட்டி, கல்யாணிபுரம், கீழகோபாலபுரம், ரெங்கநாயக்கன்பட்டி, ராமச்சந்திராபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கும், சாத்தூர் வட்டாரத்தில், வெங்கடாசலபுரம் - கே.கே.எஸ்.எஸ்.என் ரெட்டியார் மண்டபத்தில், சின்னகாமன்பட்டி, சிந்தபள்ளி, மேட்டமலை, வெங்கடாசலபுரம், கத்தாலம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கும், நரிக்குடி வட்டாரத்தில், ஏ.முக்குளம் - உண்டு உறைவிட பள்ளி வளாகத்தில், எழுவாணி, அழகாபுரி, திம்மாபுரம், வி. கரிசல்குளம், புலவாய்க்கரை ஆகிய ஊராட்சிகளுக்கும் மக்களுடன் முதல்வர் முகாம் 23.07.2024 அன்று நடைபெற உள்ளது. மேலும், இணைய வழி விண்ணப்ப முறை (Department Online Portal) எனில் சம்பந்தப்பட்ட துறைகள் முகாமிலேயே விண்ணப்பத்தினை இணைய வழியில் பதிவேற்றம் செய்திட அனைத்து முகாம்களிலும் இ சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. அங்கு மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு 50 சதவீத கட்டணம் மட்டுமே பெறப்படும். மேலும், இதுகுறித்த விபரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ பிரிவு, தொலைபேசி எண் 04562-252742, விருதுநகரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story