23வது வார்டில் முகாமினை முன்னிட்டு தூய்மை பணி

23வது வார்டில் முகாமினை முன்னிட்டு தூய்மை பணி
X
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட லட்சுமி மஹாலில் நாளை (ஆகஸ்ட் 20) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற உள்ளது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளிக்க உள்ள நிலையில் மண்டபத்தை சுற்றி இன்று (ஆகஸ்ட் 19) தூய்மை பணியானது தூய்மை பணியாளர்கள் மூலம் நடைபெற்றது. இந்த பணியினை 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி நேரில் பார்வையிட்டு துரிதப்படுத்தினார்.
Next Story