விக்கிரவாண்டியில் 23 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்

விக்கிரவாண்டியில் 23 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி பொருட்கள் 

விக்கிரவாண்டி அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 23 கிலோ வெள்ளி பொருட்களை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விக்கிரவாண்டி அருகேயுள்ள மேலக்கொந்தை கிராமத்தில் உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பத்து லட்சம் மதிப்பிலான 23 கிலோ வெள்ளி பொருட்களை தேர்தல் நிலைகண்காணிப்பு குழு போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரனையில் தனியார் நிறுவனம் மூலம் கொலுசுகள், குருமாத்துகள் செய்து விழுப்புரத்தில் இருந்து செஞ்சியில் உள்ள கடைகளுக்கு யுவராஜ் என்பவர் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

Tags

Next Story