ஆத்தூரில் பருத்தி ரூ.23 லட்சம் வர்த்தகம்

ஆத்தூரில் பருத்தி ரூ.23 லட்சம் வர்த்தகம்

விற்பனைக்கு வந்த பருத்தி மூட்டைகள்

ஆத்தூரில்பருத்தி ரூ.23 லட்சம் வர்த்தகம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 137 விவசாயிகள் 956 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆத்தூர்,

திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை பகுதியைச் சேர்ந்த 15 வியாபாரிகள் பருத்தியின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்திருந்தனர். இந்நிலையில் பி.டி.ரகம் குவிண்டால் ரூ.7,069 முதல் ரூ.7,899 வரை, டி.சி.ஹெச்.,

ரக குவிண்டால் ரூ.8,689 முதல் 10,009 ரூபாய் வரை, கொட்டு பருத்தி (கழிவு) 3,569 முதல் 5,846 வரை விற்பனையானது. மொத்தம் 956 மூட்டை , 322.45 மொத்த குவிண்டால் பருத்தி ரூ 23 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags

Next Story