ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 23 பவுன் நகை திருட்டு
தஞ்சாவூரில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 23 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தஞ்சாவூரில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 23 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தஞ்சாவூரில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 23 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். தஞ்சாவூர் விளார் ரோடு ஜெகநாதன் நகரைச் சேர்ந்தவர் தம்பிதுரை. இவரது மனைவி மல்லிகா (64). இவர் வியாழக்கிழமை தஞ்சாவூர் மணிமண்டபம் அருகிலுள்ள கூட்டுறவு நகர வங்கியில் லாக்கரில் இருந்த தனது வளையல், மோதிரம், நெக்லஸ், தோடு, செயின் உள்பட 23 பவுன் நகைகளை எடுத்து அதனை ஒரு பையில் வைத்தார். பின்னர் நகைகளுடன் அங்கிருந்து வீட்டுக்கு செல்ல மணிமண்டபம் பேருந்து நிறுத்தத்திலிருந்து நகர பேருந்தில் ஏறினார். பின்னர் மேரீஸ் கார்னர் பகுதியில் இறங்கினார். அப்போது தான் வைத்திருந்த பைக்குள் இருந்த 23 பவுன் நகைகள் அடங்கிய மற்றொரு பை காணாதது குறித்து அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகையை திருடியுள்ளனர். இதுகுறித்து அவர் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story