வள்ளல் பச்சையப்பர் 230வது நினைவு தினம் அனுசரிப்பு

வள்ளல் பச்சையப்பர் 230வது நினைவு தினம் அனுசரிப்பு

வள்ளல் பச்சையப்பர் நினைவு தினம் அனுசரிப்பு

1907ல் துவக்கப்பட்ட பச்சையப்பன் கிளை இடைநிலைப் பள்ளி வளாகத்தில் வள்ளல் பச்சையப்பரின் மணி மண்டபம் உள்ளது. இவரது 230வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

சின்ன காஞ்சிபுரத்தில், 1907ல் துவக்கப்பட்ட பச்சையப்பன் கிளை இடைநிலைப் பள்ளி வளாகத்தில் வள்ளல் பச்சையப்பரின் மணி மண்டபம் உள்ளது. இவரது 230வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, மணிமண்டபத்தில் உள்ள வள்ளல் பச்சையப்பரின் முழு திருஉருவச் சிலைக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில்,

வள்ளல் பச்சையப்பரின் திருஉருவச் சிலைக்கு கல்லுாரி முதல்வர் கோமதி மாலை அணிவித்து, மலர்துாவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், கல்லுாரி ஊழியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story