பரமக்குடி அரசு கல்லூரியில் 23 வது பட்டமளிப்பு விழா

பரமக்குடி அரசு கல்லூரியில் 23 வது பட்டமளிப்பு விழா

பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற 23 வது பட்டமளிப்பு விழாவில் 604 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.


பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற 23 வது பட்டமளிப்பு விழாவில் 604 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரி பறந்து உயர்த்தப்பட்ட கல்லூரியாக 2800 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லூரியின் 27 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் மேகலா தலைமை வகித்தார். முன்னதாக மின்னணுவியல் துறை தலைவர் சிவக்குமார் வரவேற்றார்.

பட்டடமளிப்பு விழாவில் திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன் 604 இளநிலை முதுநிலை மற்றும் எம்.பில்., மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.மேலும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற இக்கல்லூரியில் பல்வேறு துறைகளில் பயின்ற 37 மாணவர்கள் பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பேசுவையில்" கல்வியின் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.

மாணவர்கள் பெறக்கூடிய இந்தப் பட்டம் குறியீடு அல்ல தகுதி, தகுதி என்பது தன்னம்பிக்கை, குறிக்கோள், திறமை ஆகிய மூன்றையும் இணைத்து செயல்பட்டால் வாழ்க்கையில் உன்னதமான நிலையை அடையலாம்.பட்டமளிப்பு நாள் என்பது ஒரு முக்கியமான நாளாகும், தன்னம்பிக்கையுடன் மனம் தளராமல் உழைக்க வேண்டும். விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி என்பது நிச்சயம். புத்தகம் வாசிப்பது வாழ்க்கையில் பெரிய ஒரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்க்கும்.

உங்கள் கைகளில் உள்ள பட்டம் ஒரு புகழ்பெற்ற வாழ்க்கைக்கான உங்கள் நம்பிக்கையை குறிக்கிறது. பட்டப்படிப்பு என்பது கடினமான பயணத்தின் முடிவல்ல இனிய வாழ்க்கையின் துவக்கம். தாய் திருநாட்டையும் தாய் மொழியையும் பாதுகாக்க வேண்டும். மாணவர்கள் பெற்றோர்கள்,ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் கவுரவ விரிவுரையாளர்கள் அலுவலக பணியாளர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story