திருச்சி மாவட்டத்திற்கு டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
ஸ்ரீரங்கம் கோவில்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பிரசித்தி பெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 12ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்க உள்ளது. 23ஆம் தேதியன்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளதால் பக்தர்கள வசதிக்காக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பா் 12ஆம் தேதி தொடங்கி ஜனவரி 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் முக்கிய நிகழ்வாக பரமபதவாசல் திறப்பு வரும் 23ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. இதனையடுத்து திருச்சி மாவட்டத்திற்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்
Next Story