24 மனை மாரியம்மன் கோவிலில் வேண்டுதல் நிறைவேற கூழ் ஊற்றிய பக்தர்கள்

X
Komarapalayam King 24x7 |24 July 2025 9:04 PM ISTகுமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவிலில் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் கூழ் ஊற்றினர்.
குமாரபாளையம் அம்மன் கோவில்களில் ஆடி மாத சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. ஆடி அமாவாசை நாளான நேற்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் சார்பில் பக்தி இசைப் பாடல்கள் பாடப்பட்டன. கோவில் வளாகம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தாய்மார்கள் பெருமளவில் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடுகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்ற, கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ் ஊற்றினார்கள்.
Next Story
