ரூ.24.67 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம்.

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, இராசிபுரம் நகராட்சிகள் மற்றும் மல்லசமுத்திரம், வெண்ணந்தூர், பிள்ளாநல்லூர், சேந்தமங்கலம் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.24.67 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, இராசிபுரம் நகராட்சிகள் மற்றும் மல்லசமுத்திரம், வெண்ணந்தூர், பிள்ளாநல்லூர், சேந்தமங்கலம் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம், , மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், ரூ.24.67 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம், பள்ளிபாளையம் நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் மேம்பாட்டு பணியினையும், திருச்செங்கோடு நகராட்சியில் ரூ.51.5 இலட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலை மேம்பாட்டு பணியினையும், மல்லசமுத்திரம் பேரூராட்சியில் ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் வார்டு எண்.7 சின்னகொல்லப்பட்டி காட்டுகோட்டை முதல் பாலிக்காடு, வார்டு எண்.11 திருநகர் காலனி பகுதிகள், வார்டு எண்.13 வையப்பமலை சாலை சிவசுப்ரமணியம் ஆசிரியர் இல்லம், வார்டு எண்.15 பருத்திப்பள்ளி சாலை சர்ச் லேன் பகுதி, வார்டு எண்.15, ஏரிக்காடு சமுதாய கூடம் ரோடு ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணியினையும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் நாமகிரிப்பேட்டை, பட்டணம், சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி, வெண்ணந்தூர், பிள்ளாநல்லூர், ஆதனூர், மல்லசமுத்திரம் பேரூராட்சிகள், ராசிபுரம், புதுச்சத்திரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை ஒன்றியங்களில் உள்ள 424 குடியிருப்புகள், உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதுச்சத்திரம் ஒன்றியத்தில் 99 மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் மற்றும் பரமத்தியில் உள்ள 11 ஊராட்சிகளில் உள்ள 547 குடியிருப்புகளுக்கான கிராமப் பகுதிகள்) குடிநீர் திட்டப் பணிகளையும், வெண்ணந்தூர் பேரூராட்சியில் சிறப்பு நிதியின் கீழ் ரூ.74.00 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும், பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் ரூ.49.00 இலட்சம் மதிப்பீட்டில் அயோத்தி தாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கழிநீர் வடிகால் மற்றும் சாலை பலப்படுத்தும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, இராசிபுரம் நகராட்சி குறுக்குபுறம் பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் சாலை பலப்படுத்தும் பணியினையும், சி.எஸ்.புறம் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.2.84 கோடி மதிப்பீட்டில் பரமத்தி ஒன்றியத்தில் உள்ள மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் மற்றும் 11 ஊராட்சிகள், 547 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டப்பணியினையும், இராசிபுரம் நகராடசியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.33.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினையும், காகாவேரி பகுதியில் முதல்வரின் கிராமசாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.99.41 இலட்சம் மதிப்பீட்டில் காகாவேரி – பூசாரிபாளையம் சாலை வரை சாலை பலப்படுத்தும் பணியினையும், சேந்தமங்கலம் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.05 கோடி மதிப்பீட்டில் சேந்தமங்கலம் பேருந்து நிலையம் நீர்தேக்க தொட்டி மற்றும் அண்ணா நகர் நீர்தேக்க தொட்டி வரை தற்போதுள்ள பிரதான குழாய் மாற்றும் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் விரைவாகவும், தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.மேலும், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு நேரடியாக ரேசன் பொருட்கள் வழங்குதல் தொடர்பாக திருச்செங்கோடு நகராட்சி வ.மோர்பாளையம், வெண்ணந்தூர் பேரூராட்சி மசக்காளிப்பட்டி, சேந்தமங்கலம் பேரூராட்சி வடுகபட்டி ஆகிய பகுதிகளில் நேரடியாக பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று கலந்துரைடியாடினார்.இந்த ஆய்வுகளின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) .சு.வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு உட்பட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Next Story