25 ரயில்கள் ரத்து சிறப்பு ரயில்களில் பயணம்

பொன்னேரியில் இருந்து சென்ட்ரல் வரை சிறப்பு ரயில்கள் மூலம் பயணிகள் பயணித்து வருகின்றனர்
பொன்னேரி கவரைபேட்டை இடையே பராமாரிப்பு பணிகாரணமாக சென்னை-கும்மிடிப்பூண்டி வழி தடத்தில் இன்று 25 புறநகர் ரெயில்கள் ரத்து பொன்னேரியில் இருந்து சென்ட்ரல் வரை சிறப்பு ரயில்கள் மூலம் பயணிகள் பயணித்து வருகின்றனர் கும்மிடிப்பூண்டி சூளூர்பேட்டை செல்லும் பயணிகள் செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி- கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (13-ந்தேதி) காலை காலை மணி தொடங்கி மாலை 3 மணி வரை சென்னை-கும்மிடிப்பூண்டி இடையே 25 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. எனினும், பயணிகள் வசதிக்காக சென்ட்ரல்-பொன்னேரி இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்ததன் பேரில் தொடர்ந்து சிறப்பு ரயில்கள் பொன்னேரி வரை இயக்கப்பட்டு வருகிறது கும்மிடிப்பூண்டி சூளூர்பேட்டை வரை செல்லும் ரயில் பயணிகள் பராமரிப்பு பணிக்காக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்
Next Story