25 ஆடுகளை திருடிச்சென்ற இரண்டு நபர்களை கைது

X
பெரம்பலூர் மாவட்டத்தில் 25 ஆடுகளை திருடிச்சென்ற இரண்டு நபர்களை கைது பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிக்குளம் கிராமத்தில் ராஜேந்திரன் மகன் மாயகிருஷ்ணன் என்பவரின் வயலில் பட்டியில் கட்டியிருந்த சுமார் 25 ஆடுகளை கடந்த 23.02.2025 -ம் தேதி இரவு மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மேற்படி ஆடுகள் காணாமல் போனது சம்பந்தமாக பாடாலூர் காவல் நிலையத்தில் மேற்படி நபர் அளித்த புகாரின் அடிப்படையில் பாடாலூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவுப்படி காவல் ஆய்வாளர் பிரபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் இன்று நாரணமங்கலம் பகுதியில் பாடாலூர் காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் உதவி ஆய்வாளர் திருஞானம், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயகுமார் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்துகொண்டிருந்த போது அவ்வழியாக டாடா ஏஸ் வாகனத்தில் ஆடுகளை ஏற்றி வந்த இரண்டு நபர்கள் காவல்துறையினரை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்றவர்களை பிடித்து விசாரணை செய்ததில் பிரபு (33) த/பெ வேலுசாமி, சமத்துவபுரம்,புலியூர்,கரூர் மாவட்டம். 2. பூபதி (27) த/பெ வேலு, காந்தி நகர்,வடக்கு மாதவி,பெரம்பலூர் ஆகிய இருவரும் மேற்படி செட்டிக்குளம் ஆடு திருடிய வழக்கில் தொடர்புடைய நபர்கள் என்பது தெரியவந்த நிலையில் இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து எதிரிகளிடமிருந்து 25 ஆடுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர் பிரபு குற்றவாளிகளை இன்று 01.03.2025- ம் தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
Next Story

