25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியரும் உதவியாளரும் கைது

X
பெரம்பலூரில் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியரும் உதவியாளரும் கைது: ரகசிய தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை. பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் வேல்முருகன் என்பவர் புதியதாக கட்டி வருகிறார், அந்த வீட்டிற்கு வரி ரசீது போடுவதற்காக சுபாஷ் சந்திர போஸ் என்ற ஒப்பந்ததாரரிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக வரி வசூலிப்பாளர் சிவகுமாரும் அவரது உதவியாளரான ராமன் என்பவரும், டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் நகராட்சி ஊழியர்கள் மற்றும் லஞ்சம் பெறுவோர்களின் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Next Story

