25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் அலுவலர் கைது

நகராட்சி வருவாய் அலுவலர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் காலுமாக பிடித்து விசாரணை
புதிய வீட்டு வரி ரசீது பெறுவதற்காக 25 ஆயிரம் ரூபாய் கையூட்டுபெற்ற நகராட்சி உறவாய் அலுவலரை பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்து விசாரணை. பெரம்பலூர் சங்குப்பேட்டை அருகில் வசித்து வருபவர் மெய்யன் அவர்களின் மச்சினிச்சி மகள் மகேஸ்வரி என்பவருக்கு அன்பு நகர் ஆலம்பாடி பகுதியில் புதிய வீட்டிற்கு வீட்டு வரி ரசீது போடுவதற்காக நகராட்சிக்கு விண்ணப்பத்தி உள்ளார். அப்போது நகராட்சி வருவாய் ஆய்வாளர் கண்ணன் என்பவர் புதிய ரசீது போட வேண்டுமென்றால் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். மெய்யன் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அணுகி அவர்களின் வழிகாட்டின் பேரில் 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமச்சந்திரா தலைமையில் போலீசார் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கண்ணனை கையும் காரணமாக பிடித்து விசாரணை செய்து கொண்டிருந்த பொழுது சினிமா பாணியில் மயக்கம் வருவதாக மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் கண்ணனை எழுப்பி கேட்ட பொழுது அதிகாரிகளை கண்டி பயம் இல்லை இந்த செய்தியாளர்கள் கேமராவை கண்டால் தான் பயமாக இருக்கிறது என்று வாய்க்குள் முழங்கினார். செய்தவர்கள் அங்கிருந்து சென்றவுடன் மீண்டும் நாற்காலியில் அமர்ந்தார் கண்ணன் அதிகாரிகள் விசாரணையை பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story