25 ஆவது மாவட்ட ஆட்சித்தலைவராக மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

X
25 ஆவது மாவட்ட ஆட்சித்தலைவராக மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த மரு.என்.ஓ.சுகபுத்ரா தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவராக இன்று (25.06.2025) பொறுப்பேற்றுக்கொண்டார். இவர், 2017-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். இவர் முதன் முதலில் கடந்த 2018-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் சார் ஆட்சியராகவும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும்(வருவாய்), திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும்(வளர்ச்சி), அதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் மாநகராட்சி ஆணையராகவும் முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார். தற்போது விருதுநகர் மாவட்டத்தின் 25 ஆவது மாவட்ட ஆட்சித்தலைவராக மரு.என்.ஓ.சுகபுத்ரா பொறுப்பேற்றுக் கொண்டார்.
Next Story

