25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள திருச்செங்கோடு அரசு மருத்துவமனை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நாளை ஐந்தாம் தேதி திறந்து வைக்கிறார்

25 கோடி மதிப்பில் தரைதளத்துடன் கூடிய 5 அடுக்கு கட்டிடமாக அமைக்கப் பட்டுள்ள திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை நாளை 5ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். விழாவுக்கான ஏற்பாடுகளை MLA ஈஸ்வரன்,மாவட்டச் செயலாளர் கே. எஸ் மூர்த்தி ஆய்வு செய்தனர்
நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக 25 கோடி மதிப்பில் தரைதளத்துடன் 5 அடுக்கு கட்டிடமாக அமைக்கப் பட்டுள்ள திருச்செங்கோடு அரசு மருத்துவமனை திறப்பு விழா வரும் 5ஆம் தேதி காலை 10 மணிக்கு நடக்க உள்ளது.இதனை ஒட்டி அரசு மருத்துவமனையில் விழா ஏற்பாடுகளை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு,நாமக்கல் மாவட்ட சுகாதாரப் துறை இணை இயக்குனர் ராஜ்மோகன் திருச்செங்கோடுமேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு,கிழக்கு நகர செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர்.விழா மேடை எவ்வளவு நீளம் எவ்வளவு அகலம் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும் என்பதையும் நுழைவாயில் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் மேடையின் பின்னணி எப்படி இருக்க வேண்டும் அமைச்சர் மருத்துவமனையை சுற்றி பார்க்க தேவையான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது. நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப் பட்டுள்ள டைல்ஸ் பொதுமக்கள் வழுக்கி விழ வாய்ப்பு உள்ள வகையில் வழுவழுப்பாக உள்ளதால் அதனை கிரிப் உள்ளதாக மாற்ற வேண்டுமென ஒப்பந்ததாரர் மற்றும் இணை இயக்குனர் ஆகியோரிடம்        எம்எல்ஏ ஈஸ்வரன் அறிவுறுத்தினார்.திருச்செங்கோடு அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் டாக்டர் அருள், டாக்டர் செந்தில், டாக்டர் கற்பகச் செல்வி,ஆகியோர் மருத்துவமனையில் அமைய உள்ள வசதிகள் அமைக்கப்பட்டுள்ள அறைகள் குறித்து விளக்கி கூறினார்கள்..  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறியதாவது நாமக்கல் மாவட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நாமக்கல்லில் அமைந்ததற்குப் பிறகு அரசு தலைமை மருத்துவமனை திருச்செங்கோட்டில் அமைய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பு ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு சென்று விட்ட காரணத்தால், அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக 25 கோடி மதிப்பில் தரை தளத்துடன் ஐந்து அடுக்கு கட்டிடம் 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப் பட்டு ஏற்கனவே உள்ள அறுவை சிகிச்சை அரங்கத்துடன் கூடுதலாக இரண்டு அறுவை சிகிச்சை அரங்கம், மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அரங்கம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள165 படுக்கை வசதிகளுடன் கூடுதல் படுக்கை வசதிகள் என்ன 300 படுக்கைகளுடன் கூடிய மருத்துவ மனையாக இது திகழும் குழந்தைகள் பிரிவு பேறுகால சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பின் சிகிச்சை பிரிவு என அனைத்து வசதிகளும் செய்து கொள்ளும் வகையில் இந்த மருத்துவமனை அமைக்கப் பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு இணையாக வரும் நோயாளிகள் நாம் அரசு மருத்துவ மனைக்கு தான் வந்திருக்கிறோம் என நினைக்க முடியாத வகையில்தனியார் மருத்துவமனைக்கு இணையாக அனைத்து வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளது. வரும் ஐந்தாம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நடைபெறும் தகவல் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் மேலும் இந்த அரசு மருத்துவமனை அமைய உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.  நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் வெற்றி செந்தில்ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மருத்துவமனையில்,கட்டிட வசதி,எந்திர வசதி, ஏற்படுத்தி இருப்பதை போல கூடுதலாக செவிலியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
Next Story