திமுக வேட்பாளருக்கு 25 அடி உயர ரோஜாப்பூ மாலை

திமுக வேட்பாளருக்கு 25 அடி உயர ரோஜாப்பூ மாலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக வேட்பாளருக்கு 500 கிலோ எடை கொண்ட 25 அடி உயர ரோஜாப்பூ மாலை அணிவிக்கப்பட்டது.


செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக வேட்பாளருக்கு 500 கிலோ எடை கொண்ட 25 அடி உயர ரோஜாப்பூ மாலை அணிவிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட படூர் ஊராட்சியில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் காஞ்சி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் க. செல்வதிற்கு படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாராசுதாகர் தலைமையில், ஊராட்சி திமுக சார்பாக முதலில் பட்டாசு வெடிக்கும் மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்..... அதனைத் தொடர்ந்து 500 கிலோ எடை கொண்ட 25 அடி உயர ரோஜாப்பூ மாலையை கிரெயின் உதவியுடன் அமைச்சர் தா. மோ. அன்பரசன் மற்றும் வேட்பாளர் செல்வத்திற்கு அணிவிக்கப்பட்டது. என்னை தொடர்ந்து தேர்தல் காண பிரச்சாரம் பாடல் வெளியிடப்பட்டு பிரச்சார வாகனத்தை அமைச்சர் துவக்கி வைத்தார். திமுக வேட்பாளர் வரவேற்பு நிகழ்ச்சியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்..

Tags

Next Story