25 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

X
நெகிழிப் பைகள் பறிமுதல்
திண்டுக்கல் பூச்சந்தையில் 25 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்த மாநகராட்சி அலுவலா்கள்.
திண்டுக்கல் பூச்சந்தையில் 25 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்த மாநகராட்சி அலுவலா்கள், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா். திண்டுக்கல் பூச்சந்தையில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்துவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் தட்சிணாமூா்த்தி, செல்வராணி, லீலாபிரியா உள்ளிட்ட அலுவலா்கள், பூச்சந்தை, இதைச் சுற்றியுள்ள கடைகளில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 12 கடைகளிலிருந்து 25 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
