கொலை வழக்கில் தேடப்படுபவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் 25 லட்சம்!

கொலை வழக்கில் தேடப்படுபவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால்  25 லட்சம்!

கொலை வழக்கில் தேடப்படுபவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் 25 லட்சம் பரிசு என தேசிய புலனாய்வு முகமை சார்பில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.


கொலை வழக்கில் தேடப்படுபவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் 25 லட்சம் பரிசு என தேசிய புலனாய்வு முகமை சார்பில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

கோவை:தஞ்சாவூரை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் 2019 ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் நபர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படும் நிலையில் இந்த ஐந்து பேர் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகபை அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.அதில் முகமது அலி ஜின்னா,அப்துல் மஜித்,புர்ஹானுதீன்,ஷாகுல் ஹமீது,நபீல் ஹசன் என்ற தஞ்சாவூரை சேர்ந்த ஐந்து பேரின் புகைபடங்களுடன் தஞ்சாவூர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும் இந்த 5 பேர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு நபருக்கு தலா 5 லட்சம் வீதம் ஐந்து பேருக்கு 25 லட்சம் ரூபாய் பணம் சன்மானமாக வழங்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் NIA சார்பில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Tags

Next Story