கெட்டுப்போன 25 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

திருப்பூரில் வேதிப்பொருட்களை வைத்து செயற்கைமுறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் மற்றும் கெட்டுப்போன மாம்பழங்கள் 25 டன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

திருப்பூரில் வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் மற்றும் கெட்டுப்போன மாம்பழங்கள் 2.5 டன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மூன்று குழுக்களாக பிரிந்து திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தினசரி மார்க்கெட், கே எஸ் சி பள்ளி சாலை, அரிசிகடை வீதி, வெள்ளியங்காடு மற்றும் பல குடோன் வீதி ஆகிய இடங்களில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 10 குடோன்கள் மற்றும் 15 கடைகளில் இருந்து, 2.5டன் அளவிலான வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மற்றும் கெட்டுப்போன மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் ஆகும். இதையடுத்து செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்த 3 மொத்த விற்பனை நிலையங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். இதை தொடர்ந்து, பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும் எத்திலின் ரசாயனத்தை பழங்களின் மேல் நேரடியாக படும்படியாக பழுக்க வைப்பதற்கு அனுமதி கிடையாது சரியான முறைகளை பயன்படுத்தி மட்டுமே பழங்களைகளை பழுக்க வைக்க வேண்டும். கால்சியம் கார்பைடு அசிட்டலின் போன்ற ரசாயனங்களை வைத்து பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைக்க கூடாது. இவ்வாறு செயற்கையான முறையில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடும் பொழுது உடல் உபாதைகள் ஏற்படும் குறிப்பாக செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் சாப்பிட்டால் தோல் அலர்ஜி வயிற்று வலி வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்படும். ரசாயனமூலம் பழுக்கப்பட்ட மாம்பழங்கள் தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் உட்பகுதி காயாக இருக்கும் பழச்சாறு அளவு குறைவாக இருக்கும் பழத்தின் இயற்கையான மனம் குறைவாக இருக்கும் சுவை குறைவாக இருக்கும். மாம்பழ விற்பனை உரிமையாளர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story