250க்கும் மேற்பட்ட எருதுகளுடன் மாலை தாண்டும் விழா

X
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சீவல்சரகு கிராமம் ஜே புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ பொம்மையா சாமி மாலை தாத்தையா மலைக்கோயில் மாலை தாண்டும் விழா நடைபெற்றது. மாலை தாண்டும் விழா என்பது முன்னோர்களை வழிபடும் விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா எருது விடும் நிகழ்வும் நடைபெறும். அதன் அடிப்படையில் திண்டுக்கல், கரூர், திருச்சி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 13 மந்தைகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி வழிபாடு செய்தனர். விழாவில் ஒவ்வொரு மந்தையாக எருதுகளுடன் கோவிலை வலம் வந்து எருது விடும் இடத்திற்கு சென்றனர். 13 மந்த கடைச் சேர்ந்தவர்கள் 250க்கும் மேற்பட்ட விருதுகள் கோவிலை சுற்றி எருது விடும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரம் வரை எருதுகளை ஓட்டி விட்டனர். இதில் முதலாவதாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணல் நாடு மந்தையை சேர்ந்த எருது முதலாவதாக வந்தது. அந்த எருதுக்கு மஞ்சள் பொடி தூவி எருதின் உரிமையாளருக்கு எலுமிச்சங்கனி கொடுத்தனர். விழாவில் திண்டுக்கல் தேனி கரூர் திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் குடும்பங்களாக வந்து சாமி தரிசனம் பெற்று சென்றனர்.
Next Story

