250 கிலோவில் கருங்கல்லிலான ரஜினிக்கு சிலை நாள்தோறும் வழிபாடு.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 250 கிலோவில் கருங்கல்லிலான ரஜினிக்கு சிலை வடிவமைத்து, நாள்தோறும் பூஜைகள் நடத்தி வழிபாடு நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரரும், திருமண தகவல் மையம் தொழில் நடத்தி வருபவரான கார்த்திக் (48) என்பவர் , ரஜினியின் தீவிர ரசிகராவார். திருமங்கலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, தொழில் நடத்தி வரும் கார்த்திக், ரஜினிக்காக இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டு, அந்த அறைகள் முழுவதும் ரஜினியுடைய திருவுருவப்படங்கள் ஓட்டப்பட்டு , ரஜினி கோவில் என்ற பெயரில் கோபுர வடிவில் செட் அமைத்து , கோவிலுக்குள் உள்ள தூண்கள் போல் சுவர்களில் ஒட்டப்பட்டும், கோவிலுக்குள் நுழைவது போல் தோற்றமளிக்கும் ரஜினி கோவிலில் , தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி, ஏற்கனவே 250 கிலோ கருங்கல்லினால் வடிவமைத்த ரஜினி சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தியதுடன் , முன்னதாக தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி, சக்கரை பொங்கலிட்டு, ரஜினியை குல சாமியாக வழிபடும் கார்த்திக் குடும்பத்தினர் வழிபட்டனர் .
மேலும் ரஜினிக்கு சொந்த நிலம் வாங்கி விரைவில் அவருக்கு கோவில் கட்டி வழிபட உள்ளதாகவும் கார்த்திக் தெரிவித்தார் . முன்னதாக ஒவ்வொரு ஆண்டும் ரஜினி பிறந்தநாள் அன்றும், அவரது திருமண நாள் அன்றும், ரஜினிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வரும் கார்த்திக், ரஜினி உடைய புது படங்கள் வெளியாகும் போதும் அவரது புதுப்பட உருவ போஸ்டர்களை வைத்து வழிபடுவது வழக்கமாகக் கொண்டுள்ளார்