வெள்ளத்தால் 25,000 வாகனங்கள் நீரில் மூழ்கி சேதம்

வெள்ளத்தால் 25,000 வாகனங்கள் நீரில் மூழ்கி சேதம்

பைல் படம்

தூத்துக்குடியில் பெருமழை வெள்ளத்தால் 25 ஆயிரம் வாகனங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. 
தூத்துக்குடியில் கடந்த மாதம் 18 மற்றம் 19ம் தேதிகளில் பெய்த அதிகனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மாவட்ம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள், தொழிற்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் கார்கள் இருசக்கர வாகனங்கள், என 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தில் சேதம் அடைந்த வாகனங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின்பேரில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 4,837 வாகனங்கள் அரசின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பெரும்பாலான அதாவது சுமார் 20ஆயிரம் வாகனங்களுக்கு இழப்பீடு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில், வட்டார போக்குவரத்து அதிகாரி கூறும்போது, "மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த வாகனங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 10 முகாம்களை அரசு நடத்தியுள்ளது. தூத்துக்குடி நகரில் மட்டும் 4 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய கார்கள் மற்றும் வாகனங்களை உடனடியாக இயக்க கூடாது. முழுமையாக தண்ணீர் வடிந்த பின்னரே இயக்க வேண்டும். வாகனங்களை உடனடியாக இயக்குவதால் ரூ.10ஆயிரம் செலவிற்கு பதிலாக ரூ.3.5 லட்சம் வரை செலவழிக்க நேரிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story