25 ஆம் ஆண்டு வெள்ளி விழா

ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10.06.2024 திங்கட்கிழமை வெள்ளி விழா ஆண்டில் அடி எடுத்து வைப்பதன் தொடக்கமாக பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் வண்ண வண்ண பலூன்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மாணவர்களை மேளமாளத்துடன் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் பள்ளியின் பெயர் அச்சிடப்பட்ட சிறிய தொப்பி வழங்கப்பட்டு பள்ளி வழிபாட்டுக் கூட்டம் நடைபெற்றது. 25 வருடம் சிறப்பாக பணியாற்றிய துணைமுதல்வர் திருமதி P. யுவராணி அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தால் நினைவு பரிசினை வழங்கி கௌரவபடுத்தப்பட்டது. மேலும் கடந்த கல்வியாண்டில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் 100% வருகை புரிந்த மாணவர்களுக்கும் மற்றும் மூன்றாம் பருவம் முழு வருகை தந்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பள்ளி முதல்வர் அவர்கள் மாணவர்களுக்கு நல்ல கருத்துகளை கூறி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கும் இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். மேலும் சிறப்பாக அனைவரும் நன்றாக படித்து மேலும் சிறந்த பதவிகளை நீங்கள் அடைய வேண்டும் என வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story