விராலிமலை ஜல்லிக்கட்டில் 26 பேர் காயம்

விராலிமலை மெய் கண்ணுடையாள் அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளையின் உரிமையாளர்கள் உட்பட 26 பேர் காயமடைந்தனர்.

விராலிமலையில் மெய் கண்ணுடையாள் அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது இலுப்பூர் ஆர்டிஓ தெய்வநாயகி தொடங்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தாசில்தார் கருப்பையா ஆகியோர் பார்வையிட்டனர். முதலாவதாக கோயில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, மணப்பாறை, விராலிமலை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட 719 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை 170 மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினார்கள். காலை 8.05 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 2:55 மணிக்கு நிறைவு பெற்றது. காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் பார்வையாளர்கள் காளையின் உரிமையாளர்கள் என்று 26 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். படுகாயம் அடைந்த ஏழு பேர் மேல் சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர் இலுப்பூர் டிஎஸ்பி முத்துராஜா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story