2600 டன் சோயா கூட்ஸ் ரயில் மூலம் நாமக்கல் வருகை!

நாமக்கல்லுக்கு சரக்கு ரயில் போக்குவரத்து மூலம் 2600 டன் சோயா கொண்டுவரப்பட்டது.
நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் நாமக்கல் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு மற்ற மாநிலங்களில் இருந்து அவ்வபோது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு ரேசன் அரிசியும், கோழிப்பண்ணைகளுக்கு மக்காச்சோளம், சோயா, தவிடு, புண்ணாக்கு ஆகியவை சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படும்.அதன்படி, நாமக்கல் ரயில் நிலையத்திற்கு மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து சுமார் 2,600 டன் சோயா கூட்ஸ் ரயில் மூலம் வந்தது. 51 பெட்டிகளில் வந்த சோயா மூட்டைகளை தொழிலாளர்கள் 110 லாரிகளில் ஏற்றினர். பின்னர், அவற்றை கோழி தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்காக காலையிலேயே அதிக தொழிலாளர்கள் ரயில் நிலையத்தில் திரண்டனர்.

Tags

Next Story