2.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

2.66 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

ஆய்வு 

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே 2.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் ஆய்வு
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.2.66 கோடி மதிப்பீட்டிவான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், குமாரவலக ஊராட்சி, சிறுவன்காட்டு பகுதியில் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டியினையும் , அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.11.78 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தினையும், பணியம்பள்ளி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் தோப்புப்பாளையம் அக்கரையாம்பாளையம் சாலை மேம்பாடு செய்யும் பணியினையும் என மொத்தம் ரூ.2.66 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags

Next Story