.266 கிலோ புகையிலை பொருட்கள் காருடன்  பறிமுதல் வட மாநில நபர் கைது

.266 கிலோ புகையிலை பொருட்கள் காருடன்  பறிமுதல் வட மாநில நபர் கைது
X
குமாரபாளையத்தில் 266 கிலோ புகையிலை பொருட்கள் காருடன்  பறிமுதல் செய்ததுடன், வட மாநில நபர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம்  கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ஊராட்சி பாளையம் பகுதியில் சேர்ந்த தனியார் ஏற்றுமதி நிறுவன ஊழியர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றது இதில் அப்பகுதியில் இருந்த சிலர் பார்த்துவிட்டு அந்த காரை துரத்தி சென்றனர் இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.எஸ்.ஐ. குணசேகரன், ராம்குமார், ஏட்டு சீனிவாசன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று, இரண்டு டூவீலர்கள்  மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. அதனை பின் தொடர்ந்து சென்ற போலீசார் காரை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த ஒரு லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 266 கிலோ  புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்ததுடன், மாருதி ஸ்விப்ட் டிசைர் காரை பறிமுதல் செய்ததுடன், அதை ஓட்டி வந்த, ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டம், பெட்டாலா பகுதியை சேர்ந்த ஹர்ஷன்குமார், 25, என்பவரை கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குமாரபாளையத்தில் போக்குவரத்து மிகுந்த பகுதியில் விபத்துக்களை ஏற்படுத்தி மின்னலாக சென்ற சொகுசு காரை அடக்கிப் பிடித்த போலீசாருக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்
Next Story