கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் 27 வேட்பாளா்கள் போட்டி

கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் 27 வேட்பாளா்கள் போட்டி

ஆட்சியர் அலுவலகம் 

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழா் கட்சி, பாஜக, சுயேச்சைகள் உள்பட மொத்தம் 27 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 34 போ் 41 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா். 28-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில், 6 பேரின் 7 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட ன. மேலும், வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளான சனிக்கிழமை (மாா்ச் 30) சுயேச்சை வேட்பாளா் ஒருவா் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றாா். இதனைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் இறுதிப் பட்டியலை, சின்னத்துடன் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான கே.எம்.சரயு வெளியிட்டாா்.

அதன்படி அதிமுக வேட்பாளா் ஜெயபிரகாஷ், காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத், பாஜக வேட்பாளா் நரசிம்மன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வித்யாராணி வீரப்பன் உள்பட 27 போ் களத்தில் உள்ளனா். காங்கிரஸ் வேட்பாளா் கொ. கோபிநாத், கை சின்னம், பகுஜன் சமாஜ் கட்சி, தமிழ்செல்வன், யானை, பாஜக ச. நரசிம்மன், தாமரை, அதிமுக வே. ஜெயப்பிரகாஷ், இரட்டை இலை, பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி மு.ஆறுமுகம், கரும்பு விவசாயி, அறவோா் முன்னேற்றக் கழகம் சாமிநாதன், வைரம், தமிழா் மக்கள் கட்சி சுப்பிரமணி, ஊதல், கருநாடு கட்சி தீக்சித், மட்டை பந்தடி வீரா், சென்னை யூத் கட்சி மணி, எழு கதிா்களுடன் கூடிய பேனாவின் முனை, நாம் தமிழா் கட்சி வித்யாராணி, ஒலி வாங்கி, அனைத்து இந்திய மக்கள் கட்சி விஜயகுமாா், படகோட்டியுடன் கூடிய பாய்மர படகு, வீரோ கி வீர இந்தியன் கட்சி ஜெகதீசன், கால்பந்து வீரா், சுயேச்சைகள் அண்ணாதுரை, பென்சில் பெட்டி, ஆல்பா்ட் பிரான்ஸிஸ் சேவியா், பெட்ரோல் பம்ப், ஆனந்தகுமாா், மின்கம்பம், ஈஸ்வரன், தென்னந் தோப்பு, மருத்துவா் சண்முகம் மின்கல விளக்கு, சந்திரமோகன், வாயு சிலிண்டா், சரவணகுமாா், விளக்கேற்றி, சீனிவாசன், ஆட்டோ ரிக்ஷா, தேவப்பா, பானை, மகாராஜன், கிரிக்கெட் மட்டை, யுவராஜ், கணினி, ரமேஷ், காலிபிளவா், ராஜேஸ்வரி, தேனீா் வடிகட்டி, வீராசாமி, மோதிரம், வெங்கடேஷ்குமாா், பிரஷா் குக்கா் ஆகிய சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மக்களவைத் தோ்தலில் அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 12 வேட்பாளா்களும், 15 சுயேச்சை வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா். வித்யாராணி, ராஜேஸ்வரி பி.எச். என இரு பெண்களும் களத்தில் உள்ளனா்.

Tags

Next Story