ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் 27ஆம் ஆண்டு பேரவை கூட்டம்

ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் 27ஆம் ஆண்டு பேரவை கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

திருசங்கோட்டில் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் 27ஆம் ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் 27-ஆம் ஆண்டு பேரவை கூட்டம் திருச்செங்கோடு நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் J.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.

S.கந்தசாமி, T. M.முருகேசன், P.மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், S.சின்னச்சாமி ஏஐடியுசி மாநில செயலாளர் P.மாரியப்பன் ஏஐடியுசி ஆட்டோ சம்மேளன மாநிலச் செயலாளர் ஆகியோர் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்தும், சமூக பாதுகாப்பு குறித்தும், சட்டசலுகைகள் குறித்தும்,

எதிர்கால கடமைகள் குறித்தும் விளக்கிப் பேசினர். S.ஜெயராமன் ஏஐடியுசி மாவட்ட தலைவர் P.தனசேகரன் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் S.ராமகிருஷ்ணன் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் C.ஜெயராமன் வி.தொ.ச மாவட்ட செயலாளர் S.சுகுமார் சிபிஐ நகர செயலாளர் A.குமார் கட்டட சங்க மாவட்ட செயலாளர் T. K.சுப்பிரமணி ஏடிசி ஆட்டோ சங்க பொறுப்பாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 1.பிப்ரவரி 3 4 தேதிகளில் ஆட்டோ தொழிலாளர்களின் மாநில மாநாட்டிற்கு நான்கு பேர் பிரதிநிதிகளாக செல்வதென தீர்மானிக்கப்பட்டது 2. 60 வயது முடிவடைந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.6,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். 3.கட்டுமான வாரியத்தில் வழங்குவது போல் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள மானியம் ரூ. 4,00,000 (நான்கு லட்சம்) வழங்க வேண்டும். 4. ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் தனியார் கம்பெனிகளில் ஓலா,

ஊபர், ரேப்பிட்டே போன்ற வாகனங்களை தடை செய்யக்கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story