28ல் விவசாயிகள் குறைகேட்பு

28ல் விவசாயிகள் குறைகேட்பு
X
குறைகேட்பு
கள்ளக்குறிச்சியில் வரும் 28 ம் தேதி விவசாயிகள் குறைக் கேட்புக் கூட்டம் நடக்கிறது.கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரும் 28ம் தேதி காலை 11:00 மணி முதல் 2:00 மணி வரை நடக்கும் கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் வேளாண்துறை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வணிகம் மற்றும் பொறியியல், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
Next Story