28ம்தேதி கோவில்பட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை

X
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் இளையரசனேந்தல் சாலையில் 3 சென்ட் நிலத்தில் திமுக நகர கழகத்திற்கு புதிதாக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்துடன் 2 மேல் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் முகப்பில் 8 அடி பீடத்தில் 8 அடியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகத்தின் ஒரு பகுதியில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 28ந்தேதிமாலையில் கோவில்பட்டிக்கு வருகை தரும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவ சிலையை திறந்து வைக்கிறார். இந்நிலையில் முதல்வர் வருகையை முன்னிட்டு ஏற்பாடு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், நிறைவுற்ற புதிய கட்சி அலுவல கட்டிட பணிகளையும் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர கீதா ஜீவன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர். வரும் 28ந்தேதி சென்னையில் இருந்து மதுரைக்கு விமான மூலமாக வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சாலை மார்க்கமாக மதுரையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் தென்காசி மாவட்டத்திற்கு செல்கிறார்.
Next Story

