சிஎஸ்ஆர் நிதியில் 28 இலட்ச மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்

செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவக்கல்லூரியில் ரெனால்ட் நிசான் மற்றும் EFI தொண்டு நிறுவனத்தின் சார்பில் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு அரசு பொது மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, கண் மருத்துவ துறைக்கு பெரு நிறுவன சமூக பங்களிப்பு நிதியில் 28 இலட்சம் மதிப்பீட்டில் ரெனால்ட் நிசான் மற்றும் EFI தொண்டு நிறுவனத்தின் சார்பில் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நீரிழிவினால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள் மற்றும் கண்நீர் அழுத்தநோயினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உயர்சிகிச்சைக்காக சென்னை வரை செல்ல வேண்டிய நிலையை மாற்றும் பொருட்டு, இக்குறைகளை நீக்கும் அதிநவீன உபகரணங்களான நீர் அழுத்த நோய் பார்வையிழப்பு கண்டறிதல், "Perimetry" கருவி நீரிழிவு, கண் நோய் சிகிச்சை கான லேசர் கருவி மற்றும் பச்சிளம் விழித்திரை லேசர் சிகிச்சைக்கான கருவி ஆகியவற்றை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்பணித்தார்.

இந்நிகழ்வில் ரெனால்ட் நிசான் அதிகாரி ஜேவியர், EFI தொண்டு நிறுவன நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ராஜஸ்ரீ. மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கர், துணை முதல்வர் அனிதா, நிலைய மருத்துவ அலுவலர் முகுந்தன் மற்றும் துறைத்தலைவர் சுமதி, பொது அறுவைச் சிகிச்சை மருத்துவர் அரசு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story