ரூ.2.81 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்

ரூ.2.81 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டி வைத்தார்

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.2.81 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் பல்வேறு பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்தபோது, குன்னம் ஊராட்சியில் காலனி தெருவில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி, சிறு பாலம் அமைக்கும் பணி, அயோத்திதாசர் திட்டத்தில் ஆதிதிராவிடர் காலனியில் நியாய விலை கடை வரை சாலை வலுப்படுத்துதல் பணி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, மேலும், கொளப்பாடி ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நிதியிலிருந்து ஆய்க்குளம் தார்சாலை அமைக்கும் பணி, மனக்கட்டு தார்சாலை அமைக்கும் பணிகளும், புதுவேட்டக்குடி, காடூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ' சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குன்னம் ஊராட்சியில் , பெரிய வெண்மணி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கொத்தவாசல் நியாயவிலை கடையினையம், கொத்தவாசல் பள்ளிக்கட்டிடம், திறந்து வைக்கப்பட்டுள்ளது, இதில் மொத்தம் ரூ.2.81 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

என்றும் மேலும் புதுகுடிசை கிராமத்தில 20 ஆண்டு கால கோரிக்கையாக இருந்து வந்த பாலத்தை திறந்து வைத்ததால், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.என தெரிவித்தார். இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், கருணாநிதி மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story