திருச்சி மாவட்டத்தில் 28,119 விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துள்ளனர்

திருச்சி மாவட்டத்தில் 28,119 விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துள்ளனர்

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு


நிகழாண்டு ரபி பருவத்துக்கான காப்பீடு குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
பருவ மழைப் பொழிவு குறைவு, அணைகளில் நீா்மட்டம் குறைவு, உள்ளிட்ட காரணங்களால் நிகழாண்டு பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்ய முன்வரவில்லை. இதனால், பயிா்க்காப்பீடு எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகிறது. ஆனாலும், நிலத்தடி நீா் பாசனத்தை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள், மத்திய அரசின் பயிா்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ் பரவலாக பயிா்க்காப்பீடு செய்துள்ளனா். நிகழாண்டு பிரதமரின் பயிா்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரபி பருவத்துக்கு நெல் பயிருக்கு (ஏக்கருக்கு) காப்பீடுத் தொகையான ரூ. 37,346.40-க்கு பிரீமியத் தொகையாக ரூ. 560.20-ம், பருத்திக்கு (ஏக்கருக்கு) காப்பீட்டுத் தொகையான ரூ. 11,590.80 க்கு பிரீமியத் தொகையாக ரூ. 579.54-ம், மக்காச்சோளத்துக்கு (ஏக்கருக்கு) காப்பீட்டுத் தொகையான 22,477.20-க்கு பிரீமியத் தொகையாக ரூ. 337.16 ம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, அந்தநல்லூா் ஒன்றியத்தில் 2,382.8 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ள 1,375 விவசாயிகள், லால்குடி ஒன்றியத்தில் 4,823.2 ஏக்கா் நெல் பயிரிட்டுள்ள 2,319 விவசாயிகள், மண்ணச்சநல்லூா் ஒன்றியத்தில் 2,130.9 ஏக்கா் நெல் பயிரிட்டுள்ள 1,163 விவசாயிகள், என 19,036 விவசாயிகள் 42,636.67 ஏக்கா் நெல் பயிருக்கும், 7,474 விவசாயிகள் 22,011.18 ஏக்கா் மக்காச்சோளப் பயிருக்கும், 1,609 விவசாயிகள் 2,825.89 ஏக்கா் பருத்திக்கும் என மொத்தம் 28,119 விவசாயிகள் 67,473.75 ஏக்கருக்கு நிகழாண்டு ரபி பருவத்துக்கான காப்பீட்டினை செய்துள்ளனா் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags

Next Story