29-வது வார்டில் பொதுமக்களிடம் குறை கேட்பு முகாம்
Salem King 24x7 |31 July 2024 7:48 AM GMT
ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன் பங்கேற்பு
சேலம் மாநகராட்சி 29-வது வார்டில் பொதுமக்கள் குறைகேட்கும் முகாம் நடந்தது. இதில் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கைகள் கேட்டறிந்தனர். அப்போது சாக்கடை கால்வாய், ஆழ்துளை கிணறு, தெருவிளக்குகள் உள்பட அடிப்படை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். தொடர்ந்து அவர்கள் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி, வார்டு கவுன்சிலர் கிரிஜா, சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story