29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிடியாணை குற்றவாளி கைது

29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிடியாணை குற்றவாளி கைது
X
திண்டுக்கல்லில் கொள்ளை வழக்கில் 29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிடியாணை குற்றவாளி கைது
திண்டுக்கல்லில் கடந்த 1996-ம் ஆண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த மாயாண்டிதேவர் மகன் காசி என்பவரை திண்டுக்கல் தாலுகா கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து காசி நீதிமன்ற பினை பெற்று வெளியே சென்று வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் திண்டுக்கல் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இதுதொடர்பாக S.P.பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் DSP. சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் DSP தனிப்படை சிறப்பு ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மதுரையில் பதுங்கி இருந்த காசியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்.
Next Story