சேலம் மாவட்டத்தில் 29,28,122 வாக்காளர்கள்

சேலம் மாவட்டத்தில் 29,28,122 வாக்காளர்கள்

வாக்காளர் பட்டியல் வெளியீடு 

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 29,28,122 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்மேகம் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:- சேலம் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த 1-1-2024-ந் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெற்றது. மேலும் கடந்த நவம்பர் மாதம் 25, 26-ந் தேதிகளில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 9-ந் தேதி வரை படிவங்கள் பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து 524 பெண்கள், 299 இதரர் என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 9-ந் தேதி வரை நடைபெற்ற சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகளில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 69 ஆயிரத்து 546 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். 30 ஆயிரத்து 33 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 18 முதல் 19 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்கள் 53 ஆயிரத்து 391 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் சேலம் மேற்கு தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 98 ஆயிரத்து 76 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக கெங்கவல்லியில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 12 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி, உதவி கலெக்டர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமும், Voter helpline app கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story